துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று (பிப்.22) தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். இந்நிலையில், அவரை அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். மதுரையில் வ.உ.சி சிலை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் அவர், ஹெலிகாப்டர் மூலம் திருக்கோஷ்டியூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இதை தொடர்ந்து, சிவகங்கையில் உள்ள ராணி வேலு நாச்சியார் அரண்மனைக்கும் நேரில் சென்று பார்வையிடத் திட்டமிட்டுள்ளார்.