தூத்துக்குடி, நெல்லையில் நேற்று (ஏப்.8) ரோடு ஷோ சென்ற விஜய் இன்று (ஏப்.9) தனது பரப்புரையை ரத்து செய்தார். கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், வடலூர் , சேத்தியாதோப்பு ஆகிய இடங்களில் இன்று (ஏப்.9) விஜய் பரப்புரை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. மேலும், திண்டிவனம் வழியாக விக்கிரவாண்டி சென்று அங்கிருந்து கடலூருக்குச் செல்ல விஜய்க்கு காவல்துறை அனுமதியளித்தது. ஆனால், சாலை மார்க்கமாக கடலூருக்கு செல்வதில் சிக்கல் இருப்பதால் விஜயின் பரப்புரை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.