RJ பாலாஜி இயக்கத்தில்
சூர்யா நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கருப்பு' திரைப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தெலுங்கு நடிகர்
விஜய் தேவரகொண்டா மற்றும் தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோர் தங்களது X பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். சூர்யாவின் அசாத்திய உழைப்பை பாராட்டிய
விஜய் தேவரகொண்டா படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், தமிழ் சினிமாவிற்கு தேவையான ஒரு பெரிய பிளாக்பஸ்டர் படமிது என விஷ்ணு விஷால் தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.