அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே.7) மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சி அமைக்க தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை என ஆளுநர் கூறியுள்ள நிலையில் தற்போது இபிஎஸ் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, விஜய்க்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது.