தமிழ்நாடு முதலமைச்சர்
விஜய், போட்டியே இல்லாத
பிரதமர் ஆகும் யோகம் கூட இருப்பதாக ஜோதிடர் ராதன் பண்டிட் தெரிவித்துள்ளார். மேலும், “100 வருடம் கடந்து அவர் வாழ்வார்; வரும் 2029ஆம் ஆண்டில் மோடிக்கு ராகுதசை ராகுபுத்தி. அவர்
பிரதமர் ஆவது கடினம். மூன்றாம் அணி நிச்சயம் உருவாகும்.
விஜய் அப்போது தன் யோகத்தின் உச்சத்தில் இருப்பார்” என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜோதிடர் ராதன் பண்டிட்-க்கு அரசுப் பணி வழங்கியது பெரும் சர்ச்சையானது.