"திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றது எனக்கு சங்கடத்தை கொடுத்தது; அதற்காக நண்பன் என்கிற முறையில் அவரை சந்தித்தேன்" என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இன்று (மே.17) அவர் அளித்த பேட்டியில், “விஜய் முதல்வராவதை தடுக்க ரஜினிகாந்த், ஸ்டாலினை சந்தித்ததாக செய்தி வருகிறது; 'இரண்டு கட்சிகளை சேர்ப்பதற்காக பேசிக்கிறாங்க' என்றெல்லாம் சொல்கிறார்கள்; அப்படி பேச ரஜினிகாந்த் ஒரு தரம்கெட்ட ஆள் இல்லை; அதனை தெளிவுப்படுத்துகிறேன்” என்றார்.