சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை ஊழல் கட்சி என விஜய் கூறுவது குறித்து கடுமையாக விமர்சித்தார். பொது வெளியில் வராத விஜய்க்கு அரசியல் நிலவரமே தெரியவில்லை. கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்தனர். அதன்பின் 72 நாட்களுக்குப் பிறகே வெளியில் வந்தார் என்று கூறினார். தெளிவில்லாமல் பேசுவதை விட்டுவிட்டு விஜய் பிரஸ் மீட்டுக்கு வர வேண்டும் என கூறினார்.