தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தவெகவிற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விஜயை ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தியுள்ளார். தங்களுக்குள் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் மக்களின் தீர்ப்பை மதித்து சட்டமன்றத்தில் தனது உரிமையை நிலைநாட்ட விஜய்க்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.