கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் நாளை (ஜன., 12) தவெக தலைவர் விஜய் சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜராகிறார். 2 நாட்கள் அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது. உரிய பாதுகாப்பு அளிக்க டெல்லி காவல்துறையில் தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகி அண்மையில் விளக்கம் அளித்திருந்தனர். அரசியல் தலைவரான பின் முதல்முறையாக விஜய் டெல்லி செல்வதால் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.