கரூர் துயர சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே முக்கிய காரணம் என உண்மை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று (அக்.16) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “செப்.27ஆம் தேதி சனிக்கிழமை என்பதால் அந்த நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்திருக்கிறது. கரூர் துயர சம்பவத்துக்கு யாருடைய சதியும் உள்நோக்கமோ இல்லை. விஜயின் தாமதம்தான் அடுத்தடுத்த தாமதத்துக்கு தொடக்கமாக இருந்துள்ளது. இதுகுறித்து மக்கள் மன்றத்தில் விஜய் விளக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.