ஜனநாயகம் படத்தின் ரிலீஸ் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்திற்கு பாஜக தான் காரணம் என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய சிபிஎம் மாநில செயலாளர் சண்முசம், "மற்ற வழக்குகளில் அவசரமாக தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம், ஜனநாயகன் வழக்கை மட்டும் தள்ளி போட வேண்டுமா?. நீதிமன்றம் உள்நோக்கத்தோடு செயல்பட கூடாது. பாஜகவுக்கு பயந்து விஜய் அமைதியாக இருக்கிறாரா என சந்தேகமாக இருக்கிறது” என விமர்சித்துள்ளார்.