கரூர்: தவெக தலைவர் விஜய், நேற்று (செப்.27) பரப்புரை செய்யும் இடத்திற்கு தாமதமாக வந்ததாக ஏடிஜிபி டேவிட்சன் தெரிவித்துள்ளார். கரூர் ஆட்சியர் தங்கவேல் மற்றும் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் இன்று (செப்.28) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய ஏடிஜிபி, “30 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை விஜய் கடந்துவர 2 மணி நேரம் ஆனது. பெரம்பலூர், அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட ஊர்களை விட கரூரில் தவெக பரப்புரைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது” என்றார்.