கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தவெக தலைவர் விஜய் நேற்று (ஜன.12) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். தொடர்ந்து சுமார் 7 மணி நேரம் இந்த விசாரணையானது நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஜன.13) டெல்லி விமான நிலையம் விரைந்த விஜய், அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டார். தொடர்ந்து, விஜய் மீண்டும் ஜன.19 ஆம் தேதி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.