தவெக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இது குறித்து இன்று (நவ.18) பேசியுள்ள காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, "விஜய் ஒன்றும் காங்கிரஸ் கட்சிக்கு புதிதானவர் அல்ல. அவர் 2010-இல் ராகுல் காந்தியை சந்தித்து, காங்கிரஸில் இணைவது குறித்து ஆலோசித்துள்ளார். பல்வேறு காரணங்களால் அப்போது அது நடக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.