தவெக தேர்தல் அறிக்கை குழுவிற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், தமிழகத்தில் 5 மண்டலங்களுக்கு சென்று மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என கூறியுள்ளார். சமீபத்தில் தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்ட 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை நடத்திய நிலையில், குழுவினர் அனைவரும் 5 மண்டலங்களுக்கு நேரில் செல்ல வேண்டும் என விஜய் அறிவுறுத்தியுள்ளார்.