விஜய் - பவன் கல்யாண் கூட்டணி?.. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

தவெக தலைவர் விஜய் மற்றும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோர் கூட்டணி அமைப்பது போன்ற போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முழுவதிலும் இருவரும் இணைந்து இருப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் - பாஜகவின் கூட்டணியுடன் இருந்துவரும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜயுடன் பவன் கல்யாண் புகைப்படமும் இணைந்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் கூட்டணியில் மாற்றமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
