பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கிய விஜய்

15301பார்த்தது
பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கிய விஜய்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, தவெக தலைவர் விஜய் நேற்று (அக். 28) மாமல்லபுரத்தில் நேரில் வரவழைத்து ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்ட 37 குடும்பங்களின் தலைவர்களின் பெயரில் ரூ. 5 லட்சத்திற்கான வைப்பு தொகைக்கான ரசீதை அவர்களிடம் கொடுத்துள்ளார். இதன் மூலம் மொத்தம் ரூ. 1.85 கோடி தொகையை அவர் வழங்கியுள்ளார். மேலும், அக்குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரூ.5 லட்சம் செலவில் மருத்துவ காப்பீடு அட்டையையும் (Health Insurance) அவர் வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி