நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தங்களது திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மார்ச் 4-ம் தேதி ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. "நாங்கள் எதையும் திட்டமிடுவதற்கு முன்பே, நீங்கள் ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள். மிகுந்த அன்புடன் எங்களை 'விரோஷ்' என்று அழைத்தீர்கள். எனவே இன்று முழு மனதுடன், எங்கள் திருமணத்திற்கு உங்கள் நினைவாக ‘தி வெடிங் ஆப் விரோஷ்’ என்று பெயரிடுகிறோம் என ராஷ்மிகா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.