சென்னை எழும்பூர் தொகுதியில் தவெக தலைவர்
விஜய், தமது கட்சியின் வேட்பாளர் ராஜ்மோகனை ஆதரித்துத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த வாகனத்தில் சாலை மார்க்கமாக வலம் வந்த அவர், பொதுமக்களிடம் விசில் சின்னத்தைக் காண்பித்து ஆதரவு திரட்டினார். அப்போது, சாலையின் இருபுறமும் பெரும்திரளாகக் கூடியிருந்த தொண்டர்கள் அளித்த பல்வேறு பரிசுப் பொருட்களையும் அவர் அன்புடன் பெற்றுக்கொண்டார்.