விஜய்யின் பிரச்சார பேருந்து மீண்டும் ஒப்படைப்பு

26பார்த்தது
விஜய்யின் பிரச்சார பேருந்து மீண்டும் ஒப்படைப்பு
தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார பேருந்து சிபிஐ அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்., 27ஆம் தேதி கரூரில் பிரச்சார பேருந்தின் மீது விஜய் நின்று பேசிக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்காக வரும் 12ஆம் தேதி விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உள்ளார். இதனிடையே பேருந்து தீவிர ஆய்வுக்கு பின் மீண்டும் கட்சியினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தேவைப்படும்போது மீண்டும் பேருந்தை வழங்க வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி