தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்
விஜய், தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். வரும் 22ம் தேதி டெல்லி செல்லும் அவர்,
பிரதமர் மோடியை சந்தித்து தமிழக நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி கோர உள்ளார். மேலும்,
காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் அவர் சந்திக்க உள்ளார்.