விஜய் ரோடுஷோவுக்கு மறுப்பு.. கூட்டம் நடத்த பரிந்துரை செய்த போலீஸ்

45பார்த்தது
விஜய் ரோடுஷோவுக்கு மறுப்பு.. கூட்டம் நடத்த பரிந்துரை செய்த போலீஸ்
தவெக தலைவர் விஜய்யின் ரோடுஷோவுக்கு அனுமதிக் கேட்டு, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை இன்று (டிச.2) சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 10 நிமிடங்கள் வரை நடந்தது. தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணனையும் சந்தித்துப் பேசினார். இதற்கிடையே புதுவை உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் கூட்டம் நடத்துவது தொடர்பாக புஸ்ஸி ஆனந்திடம் போலீஸ் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி