விஜய் தமிழகம் முழுவதும் தனது சுற்றுப் பயணத்தை அறிவித்துள்ளார். அவரது பயணத் திட்டம் சனிக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தவெக-வில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விமர்சனங்களை எதிர்கொள்ளும் தவெக தொண்டர்கள், இப்போது ‘வீக் எண்ட் பார்ட்டி’ என்ற விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பல அ
ரசியல் கட்சியினர் விஜய்யின் இந்த சனிக்கிழமை பயணத்தை கிண்டலடித்து வருகின்றனர். முழு நேர அரசியல்வாதி தினம்தோறும் மக்களோடு தொடர்பில் இருக்க வேண்டும் என விமர்சித்துள்ளனர்.