விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவில், மரபுக்கு மாறாக தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசு விழாக்களின் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்பதே விதிமுறை என சுட்டிக்காட்டியுள்ள அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்த நடைமுறை மீறல் ஏற்புடையதல்ல என கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் பண்பாட்டையும் மரபையும் போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமையாதது வருத்தமளிப்பதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.