தஞ்சை தவெக கூட்டத்தில் தொண்டர் ஒருவர் விஜய்-சங்கீதா இணைந்திருக்கும் புகைப்படத்தை காண்பித்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில், விஜய் மேடையில் பெண் பாதுகாப்பு குறித்து பேசாததற்கு அவரது குடும்ப சிக்கலே காரணம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விஜய் தொடர்ந்து மௌனம் காத்து வரும் நிலையில், இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.