பான் இந்தியா நடிகராக ஜொலிக்கும் விஜய் சேதுபதி, நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் 'ராமாயணா' படத்தில் விபீஷணனாக நடிக்கவுள்ளதாக பரவிய செய்தியை மறுத்துள்ளார். இத்ததகவல் முற்றிலும் வதந்தி என்றும், இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் அவர் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். தற்போது 'டிரெய்ன்' மற்றும் வெற்றிமாறனின் 'அரசன்' போன்ற திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தி படம் குறித்த வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.