வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு தொடங்கப்படாதது மற்றும் தனது தேதிகள் வீணானது போன்ற காரணங்களால் அவர் விலகியதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. விஜய் சேதுபதி, ‘அரசன்’ படத்திற்காக ஒதுக்கிய தேதிகளை தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ படத்திற்கு கொடுத்துவிட்டதாக தெரிகிறது.