நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'சூது கவ்வும்' திரைப்படம், வருகிற பிப்.20-ம் தேதி மீண்டும் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், அதன் தனித்துவமான கதையமைப்பிற்காக இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவான இப்படத்தில் அசோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.