”தக் லைஃப்” படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கியுள்ளார். ஏற்கனவே அரவிந்த் சுவாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண்விஜய்யை வைத்து ”செக்கச் சிவந்த வானம்” படத்தை மணிரத்னம் இயக்கியிருந்த நிலையில், மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். சிம்பு ”அரசன்” உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருப்பதால் அவருக்கு எழுதிய கதையில் விஜய்சேதுபதி நடிக்கிறார். ”காந்தாரா” பட புகழ் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.