IPL, உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த விஜய் சங்கர்

4278பார்த்தது
IPL, உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த விஜய் சங்கர்
இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரும் தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரருமான விஜய் சங்கர், தனது 35 வயதில் ஐபிஎல் மற்றும் அனைத்து வடிவ உள்ளூர் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் '3D' வீரராக கவனம் ஈர்த்த இவர், சர்வதேச அளவில் 12 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி முத்திரை பதித்துள்ளார். அண்மையில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் இவரை தேர்வு செய்யாத நிலையில், இந்த ஓய்வு முடிவை அவர் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி