“
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் இளகிய மனதுக்காரர். கரூர் சம்பவத்தின்போதே, இந்த ஜோசப்
விஜய் செய்த தவற்றுக்கு, திருச்சியில் வைத்தே அவரை லாக் செய்திருந்தால் எல்லாம் சரியாக நடந்திருக்கும்” என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, “ஆதவ் அர்ஜுனாவைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் எங்கள் தலைவர் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டார்” என கூறியுள்ளார்.