கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு விஜய் தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.