கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று (ஜன.12) ஆஜரான தவெக தலைவர் விஜய் விசாரணையை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பியிருந்தார். இந்நிலையில், மீண்டும் 19ம் தேதி நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஆஜராக அனுமதி தர விஜய் தரப்பு கேட்டிருந்த நிலையில் 19ம் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.