“காங்கிரஸ் கட்சிக்கு விஜய் புதியவர் அல்ல” என ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “2010ஆம் ஆண்டு ராகுலை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அந்த இணைப்பு என்பது பல்வேறு காரணங்களால் நடக்கவில்லை. எனவே விஜய் ஒன்றும் எங்களுக்கு தெரியாதவர் அல்ல. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எனவே சமூகவலைதளங்களில் வருவதெல்லாம் அரசியல் கட்சிகளின் முடிவு என நாம் நினைக்கக் கூடாது” என்றார்.