தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் இன்று (ஏப்., 10) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தவெக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து பரப்புரை செய்கிறார். இந்த தொகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், ஸ்டார் தொகுதியாக உள்ளது. காங்கிரஸ் சார்பில் மாங்குடி, அமமுக சார்பில் தேர்போகி பாண்டி ஆகியோர் களத்தில் உள்ளனர். இதனிடையே விஜய்யின் இன்றைய பிரச்சாரம் சற்று வித்தியாசமாக இருக்க வாய்ப்புள்ளது. பகல் 12 மணி முதல் வாக்கு சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.