விருகம்பாக்கம், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி?

0பார்த்தது
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவர் விஜய் சென்னை விருகம்பாக்கம், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நாகை, விக்கிரவாண்டி, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த சூழலில் தற்போது விருகம்பாக்கம், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. திருச்சி கிழக்கில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் தற்போது எம்எல்ஏவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி