தவெக தலைவர் விஜய் வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் இன்று (பிப்.23) தவெக நிர்வாகிகளை சந்திக்கிறார். இதில் QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு பெற்ற 4,900 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணமாக கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அனுமதி இல்லை என பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஈரோடு நிகழ்வை தொடர்ந்து, வசதிக்காக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.