களத்தில் தவெகவினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - விஜய் வேண்டுகோள்

98பார்த்தது
களத்தில் தவெகவினர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - விஜய் வேண்டுகோள்
தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆளுங்கட்சியின் விமர்சனங்களுக்குக் கடும் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவின் கடந்த கால நிலைப்பாடுகளை விமர்சித்துள்ள அவர், எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க நிர்வாகிகள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பது மற்றும் புதிய வாக்காளர்களை ஒருங்கிணைப்பதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கட்டளையிட்டுள்ளார். ராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, வரும் தேர்தலில் வெற்றியைச் சரித்திரமாக்க இப்போதே துரிதமாகக் களப்பணியாற்ற வேண்டும் என அவர் அந்த மடலில் கேட்டுக்கொண்டுள்ளார்.