தவெக விஜய்யின் முன்னாள் மேலாளரும், கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் உள்ள பி.டி செல்வகுமார் இன்று (பிப்.11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விஜய் எந்தெந்த தொகுதியில் யாரை நிறுத்தினாலும் அவர்களுக்கு எதிராக களம் இறங்கி பணியாற்றுவேன். வரும் தேர்தலில் படு தோல்வி அடைந்து எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலைக்கு விஜய் தள்ளப்படுவார். அரசியலும் சினிமாவும் வேண்டாம் என்று வெளிநாட்டிற்கே தப்பி செல்ல உள்ளார். இளைஞர்களுக்கு விஜய் வரவு பெரும் ஆபத்து” என பேசினார்.