சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெகவால் திமுக கூட்டணிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை கும்பகோணத்தில் இன்று (பிப்., 08) செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'விஜய்யின் போட்டி அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு சாதகமாக அமையும். கடந்த தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டது திமுகவிற்கு சாதகமாக அமைந்தது. இம்முறை என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துள்ளதால் அந்த வாய்ப்பு திமுகவிற்கு கிடைக்காது' என்று தெரிவித்தார்.