மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சென்னையில் இன்று (மே.24) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதிய முதலமைச்சர்
விஜய், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கல்வி தொடர்பான PMSHRI திட்டம் குறித்து விரைவில் தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்தப்படும்” என கூறினார். மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் கல்வி மற்றும் வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு மேலும் பயன் தரும் எனவும் அவர் குறிப்பிட்டதாக தெரிகிறது.
நன்றி: நியூஸ்18