கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை எதிர்த்துத் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளாக நிலுவையில் உள்ள இவ்வழக்கை நடத்துவதை விடப் பொதுவாழ்வில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதால் வழக்கைத் திரும்பப் பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாக அவர் எடுத்துள்ள இந்முடிவு
அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
நன்றி: நியூஸ் 18