அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்த விஜயபாஸ்கர்

3பார்த்தது
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவு அளித்ததால் அதிமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விஜயபாஸ்கர் நீக்கப்பட்டார். இதையடுத்து, புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட பழனிவேல் அலுவலகத்திற்குள் நுழைய விஜயபாஸ்கர் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 15 நாட்களாக பூட்டிக்கிடந்த புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தை, இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு பின் திறக்க சம்மதித்து அதன் சாவியை விஜயபாஸ்கர் தரப்பினர் தற்போது காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி