அதிமுகவில் நீடிப்பதா என்பது குறித்த இறுதி முடிவை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று அறிவிக்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்றும் நாளையும் வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த பின்னர், நாளை மறுநாள் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்துத் தனது இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அவரது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த எதிர்பார்ப்பு மேலும் நீடித்துள்ளது.