சத்தீஸ்கர் மாநிலத்தில் சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (SECL)-க்கு சொந்தமான அமேரா நிலக்கரி சுரங்கத்தின் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்த்து தெரிவித்து பர்சோடி கலான் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது மக்கள் போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியதால், நிலைமை மோசமடைந்தது. இதற்கு பதிலடியாக, கூட்டத்தை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.