
விழுப்புரம்: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை, 8ம் தேதி, பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் ரேஷன் கார்டில் பெயர் திருத்தம், உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புகைப்படம் பதிவேற்றம், மொபைல் எண் இணைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தேவையான ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொள்ளலாம்.






























