விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் ஆற்காடு கிராமத்தில் உள்ள அங்காளம்மன் மற்றும் அக்னீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. மூலவருக்கு அரிசி சாதம் சாத்தப்பட்டு, காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஆற்காடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னீஸ்வரரை தரிசனம் செய்தனர். கோவில் சாமியார் AVM வேலாயுதம் பக்தர்களுக்கு படையலிடப்பட்ட சாதம் மற்றும் பழக்கன்றுகளை வழங்கினார்.