விக்கிரவாண்டி அருகே சித்தணி கிராமத்தில் மின்வாரிய ஊழியர்கள் தணிக்கை மேற்கொண்டபோது, சேகர் (35) என்பவர் தனது வீட்டிற்கு ரூ.1.19 லட்சம் மதிப்புள்ள 5,150 யூனிட் மின்சாரம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக உதவி செயற்பொறியாளர் புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சேகர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகிறார். சேகர் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு மின் திருட்டில் ஈடுபட்டு அபராதம் விதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.