மேல்மலையனூர் அருகே பானுமதி (37) என்பவரிடம், அங்கன்வாடி மையப் பொறுப்பாளர்
வேலை வாங்கித் தருவதாகக் கூறி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனியப்பன் (40) ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் வாங்கியுள்ளார். மேலும், பானுமதி மூலமாக ஜெயந்தி, வரதன் ஆகியோரிடமும் மொத்தம் ரூ. 6 லட்சத்து 68 ஆயிரத்து 500 வாங்கியுள்ளார். ஆனால், கூறியபடி 3 பேருக்கும்
வேலை வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் முனியப்பன் மோசடி செய்துள்ளார். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.