செஞ்சி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞா் உயிரிழப்பு

82பார்த்தது
செஞ்சி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞா் உயிரிழப்பு
செஞ்சி வட்டத்துக்குள்பட்ட மகாதேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த காளியின் மகன் ஏழுமலை (30). விவசாயி. இவர், செல்லபிராட்டை பெரிய ஏரியில் மீன் பிடிக்கச் சென்றாராம். அப்போது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டு ஏரியில் தவறி விழுந்தாராம். 

இதையடுத்து, அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த வளத்தி போலீசார் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி